13 வயது சிறுமி ஒருவர் பாட்டன், மாமா மற்றும் அவரது மூத்த சகோதரர் ஆகியோரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மொனராகலை, எத்திமலே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பாடசாலை மாணவியான சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து இவரை பரிசோதித்த வைத்தியர்கள் கருத்தரித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை அதிகாரிகள் எத்திமலே பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து , பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதில் , சிறுமி தனது பாட்டன், மாமா (தாயின் சகோதரர்) மற்றும் சிறுமியின் மூத்த சகோதரரால் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சிறுமியின் சகோதரனை முதலில் கைது செய்த பொலிஸார், இதையடுத்து பாட்டன் மற்றும் மாமாவை கைது செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி மேலதிக சட்ட வைத்திய மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply