•அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி – 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு 23  சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் விசாரணை நடைபெற்றது.

•விசாரணை நடைபெறும் நீதிபதி வீட்டின் முன் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று உத்தரவிட்டார்.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் நேற்று இரவு மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் நள்ளிரவில் விசாரணை நடைபெறுகிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயண் ஆஜராகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலட்சுமி ஆகியோர் ஆஜராகின்றனர்.

இந்நிலையில், விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம்.

ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர். விசாரணை நடைபெற்ற நீதிபதி வீட்டின் முன் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Share.
Leave A Reply