யாழ்ப்பாணத்தில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரிடமிருந்து 3 பரல்களுடன் சுமார் 300 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது எரிபொருளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்கி பொதுமக்கள் ஒத்துழைத்தால் கறுப்புச் சந்தை நடைமுறையை கட்டுப்படுத்தி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மோசடியாக அதிகளவு வழங்கப்படும் எரிபொருளை தடுக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.