கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வாடகை வண்டிகளுக்கான புதிய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை வண்டியின் புதிய கட்டணத்தை பார்க்கும் பொழுது, கொழும்பிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில் செல்ல முடியும் என தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்காவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வாடகை வண்டியின் கட்டணம் 73,000 ரூபாவை அண்மித்துள்ளது.

இலங்கையில் இருந்து அண்டை நாடான இந்தியாவிற்கு விமான டிக்கெட்டின் சராசரி விலை சுமார் 70,000 ரூபாவாகும்.

கட்டுநாயக்காவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் கட்டணத்தை விடவும் இந்தியாவிற்கு விமானத்தில் செல்வதற்கு குறைவான பணமே தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share.
Leave A Reply