மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் உள்ளே செல்ல அடையாள அட்டை காண்பித்தால்தான் செல்ல முடியும். பொதுக்குழு நுழைவு வாயிலிலும் பல்வேறு இடங்களில் கியூ ஆர் கோடு அட்டை பரிசோதிக்கும் எந்திரங்கள் இருக்கின்றன.

சென்னை: சென்னை வானகரத்தில் நாளை (திங்கட்கிழமை) அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நாளை காலை 9 மணிக்கு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வர உள்ள நிலையில் நம்பிக்கையுடன் அவர்கள் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து முடித்துள்ளனர்.

கடந்த தடவை நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தின் போது ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் நவீன வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பொதுக்குழுவிற்கான பந்தல், மேடை, வரவேற்பு, உணவு, இருக்கை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் 99 சதவீதத்தை முடித்து நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

மேடை 30 மீட்டர் அகலத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  பொதுக்குழு நடைபெறும் பந்தல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

அதன் முகப்பு தோற்றம் ஜார்ஜ் கோட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமியின் ஆளுயர படம் இருபுறமும் அமையப் பெற்றுள்ளது.

நடுவில் அண்ணா படம் இடம் பெற்றுள்ளது. வழக்கமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெறும்.

ஆனால் இந்த முறை எடப்பாடி பழனிசாமி படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கியூ ஆர் கோடுடன் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த நுழைவு அட்டையை காட்டினால்தான் பொதுக்குழு கூட்டம் நடக்கும் அரங்கத்துக்குள் செல்ல முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு பொதுக்குழு கூட்ட நுழைவு பகுதியில் ஏராளமான கியூ ஆர் கோடு அடையாள அட்டையை அனுமதிக்கும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் உள்ளே செல்ல அடையாள அட்டை காண்பித்தால்தான் செல்ல முடியும்.

அதுபோல பொதுக்குழு நுழைவு வாயிலிலும் பல்வேறு இடங்களில் கியூ ஆர் கோடு அட்டை பரிசோதிக்கும் எந்திரங்கள் இருக்கின்றன.

அந்த எந்திரங்களில் அடையாள அட்டையை காட்டினால்தான் உறுப்பினர்கள் உள்ளே செல்ல முடியும்.

தேவையில்லாமல் மற்றவர்கள் பொதுக்குழு அரங்கத்திற்குள் நுழைவதை தடுக்கவே இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழு நடக்கும் வானகரம் பகுதியில் சாலையின் இருபுறமும் அ.திமு.க. கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

திரும்பும் திசையெல்லாம் எடப்பாடி பழனிசாமி படம் உள்ள பதாகைகள் பொறுத்தப்பட்டுள்ளன.

ஒரு இடத்திலும் ஓ.பன்னீர் செல்வம் படத்தை பார்க்க இயலவில்லை. இதையும் படியுங்கள்: பொன்னேரி அருகே மாணவர்களின் சத்துணவை சாப்பிட்டு எம்.எல்.ஏ. ஆய்வு இந்த நிலையில் பொதுக்குழு கூட்ட அரங்குக்குள் இன்று காலை முதல் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இன்று மாலைக்குள் அந்த பணிகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே இடத்தில் திரண்டால் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சாப்பிடும் இடம் தனியாக பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கும் இன்று காலை முதல் இருக்கைகள் போடப்பட்டு வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட வாரியாக கையெழுத்து போடுவதற்காக தனித்தனி அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறு குழப்பம் கூட வந்துவிடக்கூடாது என்று அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த ஆலோசனைக்கு பிறகு செய்து முடிக்கப்பட்டுள்ளன.

இன்று சென்னை வந்தனர் இதுகுறித்து பொதுக்குழுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து வரும் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது:- பொதுக்குழுவுக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன.

காலை 7 மணி முதல் உறுப்பினர்கள் பந்தலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கோட்டை வடிவில் பிரமாண்ட முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுவிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

10 குதிரைகள், 2 யானைகள் மூலம் வரவேற்பு அளிக்கப்படுகின்றன. இதுதவிர இசை கலைஞர்களின் நடனம், நாட்டிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான் மாநில இசை கலைஞர்கள் 250 பேர் பங்கேற்கிறார்கள். திருப்பதியில் இருந்து நாதஸ்வர கலைஞர்கள் வருகிறார்கள்.

பொதுக்குழுவிற்கு வரும் வயதானவர்களை அழைத்து செல்ல 2 பேட்டரி கார் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரோட்டில் இருந்து பந்தலுக்கு செல்ல இது உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ள பந்தல், மேடை இறுதி கட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பா.பென்ஜமின் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

Share.
Leave A Reply