இலங்கை தலைநகர் கொழும்பில் ஜூலை 9ம் தேதி நடந்த போராட்டத்துக்குப் பிறகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகத் தயார் என தனக்கு அறிவித்ததாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன” தெரிவித்திருந்த நிலையில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

Share.
Leave A Reply