கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
காலைவேளையில் அலுவலகங்களுக்கும் கொழும்புக்கும் வந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய வீடுகளுக்கு இடைநடுவிலேயே சென்றுவிட்டனர். இதனால், பொதுப் போக்குவரத்தில் பகல்வேளையிலும் கடுமையான சன நெரிசல் காணப்பட்டது.
இந்நிலையில், முக்கியமான இடங்களின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தரித்த இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இராணுவ கவச வாகனங்களின் நடமாட்டங்களும் கொழும்பு வீதிகளில் அதிகரித்துள்ளன.