மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (18) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்தார்.

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில், நாவற்குடா இந்து கலாசார நிலையத்துக்கு முன்னால் பொதுச் சந்தைக்கு அருகில் மீட்கப்பட்ட இந்த ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply