தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து நவம்பர் 18, 2004 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
இந்த ஜோடி 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் 2022 இல் பிரிந்தனர். தனுஷ் – ஐஸ்வர்யா நட்சத்திர ஜோடி போல் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பிரிந்த பிரபல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் இதோ.
1. அர்விந்த் சுவாமி
அரவிந்த் சுவாமிக்கும் – காயத்ரி ராமமூர்த்திக்கும் 1994ல் காதல் திருமணம் நடந்தது. ஆனால் இருவரும் 2010 இல் பிரிந்தனர், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டனர். அதன்பிறகு குழந்தைகளின் பொறுப்பை அரவிந்த் ஏற்றுக்கொண்டார். பின்னர் 2012 இல், அரவிந்த் சாமி அபர்ணா முகர்ஜியை மணந்தார்.
2. பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் மற்றும் லலிதா குமாரி 1994 இல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் 2009ல் கருத்து வேறு பாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
பின்னர் 2010ல் பிரகாஷ் ராஜ் நடன இயக்குனர் போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
3. தனுஷ்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-ற்கும் 6 மாத காதலுக்கு பின் நவம்பர் 18, 2004 அன்று திருமணம் நடந்தது. ஆனால் 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2022 இல் பிரிந்தனர்.
4. பிரபு தேவா
பிரபுதேவா மற்றும் ரம்லத் இருவரும் 1995ல் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இஸ்லாமிய பெண்ணான ரம்லத், பிரபுதேவாவை மணக்க தனது பெயரினை லதா என மாற்றிக்கொண்டார். ஆனால் 2011ல் இருவரும் சில காரணங்களால் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
5. சரத்குமார்
சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி. இவரின் முதல் திருமணம் 1984 இல் நடந்தது. ஆனால் 2000 ஆம் ஆண்டு சாயாதேவியும் சரத்குமாரும் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் சரத்குமார் நடிகை ராதிகாவை 2001ல் திருமணம் செய்து கொண்டார்.
6. சுரேஷ் சந்திரா மேனன்
இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் சந்திர மேனனுக்கும் ரேவதிக்கும் 1986 இல் திருமணம் நடந்தது. ஆனால் இருவரும் 2013ல் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். தற்போது போது வரை இருவரும் தனிமையில் வாழ்ந்து வருகின்றனர்.
7. பார்த்திபன்
பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் 1991ல் திருமணம் நடந்தது. நீண்ட நாள் காதலுக்கு பிறகு நட்சத்திர திருமணம் நடந்தது.
ஆனால் 2002ல் இருவரும் கருத்துவேறுபாடு காரணத்தால் பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு பார்த்திபன், சீதா வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.சமீபத்தில் இவரது மகளுக்கு திருமணம் நடந்துள்ளது.