கம்பளை – வெலம்பொட பரணப்பட்டிய, வட்டப்பொல பகுதியில் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றில் தனியாக வசித்து வந்த 68 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பெண்ணின் கழுத்து அறுந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை நீதிமன்றத்தின் நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்து, சடலம் தற்போது கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை – வெலம்பொட பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

Share.
Leave A Reply