சிங்கப்பூரின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சர்வதேச விவகார பிரிவின் சொலிசிட்டர் ஜெனரலிற்கு எழுதியுள்ள கடிதத்தில் 17 அமைப்புகளும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்குட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

 

கீழ் கைச்சாத்திட்டுள்ள அமைப்புகளாகிய நாங்கள் உடனடியாக கோத்தபாய ராஜபக்சவை இலங்கையில் சர்வதேச சட்டங்களின் கீழ் பாரதூரமான குற்றங்கள் இடம்பெற்றமை குறித்துவிசாரணை செய்து பொருத்தமானால்  வழக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என  17அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஜூலை 14 ம் திகதி கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தனது இராஜினாமாவை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பித்தார் இதன் காரணமாக அவர் தொடர்ந்தும் விடுபாட்டுரிமைக்குரியவர் இல்லை என  17 அமைப்புகளும்தெரிவித்துள்ளன.

 

2008-2009காலப்பகுதியில் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் மனித உரிமை துஸ்பிரயோக இராணுவநடவடிக்கையொன்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது,அந்தவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி காணப்பட்டது,விடுதலைப்புலிகளிற்கு எதிரான அரசாங்கத்தின் வன்னி இராணுவநடவடிக்கை கண்மூடித்தனமான குண்டுவீச்சு எறிகணை வீச்சு பொதுமக்கள் இலக்குகள் மீதான தாக்குதல்களை உள்ளடக்கியிருந்தது.

இலங்கை அரசாங்கம் தமிழ் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களிற்குள் செல்லுமாறு உத்தரவிட்டதுடன் பின்னர் அதனை தாக்கியது மருத்துவமனைகளும் தற்காலிக மருத்துவமனைகளும் 30 தடவைகளிற்கு மேல் தாக்கப்பட்டன, இலங்கையின் யுத்தத்தின் இறுதி தருணங்களில் 70,000 முதல் 169,796 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது.

கட்டளை பொறுப்பின் அடிப்படையில் சாத்தியமான பொறுப்பிற்காக ராஜபக்சவை விசாரiணை செய்யவேண்டும்,விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் சரணடைந்ததும் அவர்களை சுட்டுக்கொல்லுமாறு கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டார் என்பதற்கான தகவல்கள் பொதுவெளியில் காணப்படுகின்றன.

கோத்தபாய ராஜபக்ச மருத்துவமனைகளின் மீது பரந்துபட்ட திட்டமிடப்பட்ட குண்டுவீசு;சுகளிற்கு வழிகாட்டினார்,பொதுமக்கள் இலக்குகளும் பொதுமக்களும் சட்டபூர்வமான இலக்குகள் என மீண்டும் மீண்டும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலிற்கும் ராஜபக்ச காரணம் என தகவல்கள் காணப்படுகின்றன.

இலங்கையில் இழைக்கப்பட்ட பாரதூரமான சர்வதேச குற்றங்களிற்காக சிங்கப்பூர் விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதத்தில் நியாயாதிக்கத்தை ராஜபக்ச மீது பிரயோகிக்கவேண்டும்.

சர்வதேச சட்டங்கள் மற்றும் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டு சட்டங்களின் கீழ் பாரிய அநீதிகளிற்காக கோத்தபாயவிற்கு எதிராக சட்டமா அதிபர் விசாரணைகளை ஆரம்பிக்கலாம்.

உலகின் பாரதூரமான குற்றங்களை இழைத்தார் என ராஜபக்ச நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்,

பாரிய துஸ்பிரயோகங்களுடன் தொடர்புபட்ட நபருக்கு சிங்கப்பூர் அடைக்கலம் அளிக்ககூடாது மாறாக சிங்கப்பூர் சர்வதேச நீதி கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டும்,மேலே குறிப்பிடப்பட்ட குற்றங்களிற்காக உடனடியாக ராஜபக்சவை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என 17 அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply