வீட்டில் தூக்கிட்ட நிலையிலிருந்த உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உமா மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்ட நிலையிலிருந்து உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.டி.ஆரின் 12வது மகளான உமா மகேஸ்வரி ஏற்கனவே உடல் ரீதியாக பல பிரச்சினைகளில் இருந்து வந்த நிலையில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உமா மகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்.டி.ஆர் மகளின் திடீர் தற்கொலை முடிவு தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply