ஆந்திர மாநிலம் கொத்தா பேட்டை போலீஸ் நிலைய்த்திற்கு பெண் ஒருவர் மனித தலையுடன் வந்ததை கண்டு அதிர்ச்சி போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் வெளியான தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தாபேட்டை ராமாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மா.
இவருடைய மருமகள் வசுந்தரா (35). இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறுகள் நடந்து வந்தது.
வசுந்தராவுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சுப்பம்மா சந்தேகப்பட்டார், மேலும் வசுந்தரா தனது குடும்பத்தின் சொத்தை அவரது பெயருக்கு மாற்றிவிடுவார் என்றும் பயந்து உள்ளார்.
சுப்பம்மாவும் மற்ற உறவினர்களும் சேர்ந்து மதிய உணவு சாப்பிட வருமாறு கூறி வசுந்தராவை தங்கள் வீட்டிற்கு அழைத்து உள்ளனர்.
அங்கு வசுந்தரா கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.பின்னர் சரணடைவதற்காக சுமார் 6 கிமீ தூரம் போலீஸ் நிலையத்திற்கு சுப்பம்மா நடந்து வந்துள்ளார்.
மாமியரே மருமகளை அரிவாளால் வெட்டிய திடுக் தகவல் வெளிச்சத்திற்கு வர, சுப்பம்மாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

Share.
Leave A Reply