கான்பூர்: போலீஸ் ஸ்டேஷனிலேயே, இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்து கொஞ்சிய, ஏட்டய்யாவை, அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துவிட்டனர்.
உத்தர பிரதேசத்தில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம் கொடூரங்கள்.. கொடுமைகள்.. தினுசு தினுசாக சேட்டைகள் என பெருகி பெருகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள டியொரியா என்ற மாவட்டத்தில் கேவலமான ஒரு சம்பவம் நடந்தது.. பாட்னா என்ற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்துள்ளது.
“சுய இன்பம்”
அதனால் பாட்னா ஸ்டேஷனுக்கு இந்த விவகாரம் தொடர்பாக புகார் தர சென்றார்.. அப்போது ஸ்டேஷனில் பீஷ்ம் பால் சிங் என்ற போலீஸ்காரர் இருந்தார்..
பெண்ணிடம் புகாரை பெற்று கொண்டு, தனது அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து கொண்டு நின்றிருக்கிறார்..
பிறகு சுய இன்பம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ந்துபோன அந்த வெளியே சென்றுவிட்டார்.. பிறகு மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்தபோதும் இதுபோலவே செய்தார் அந்த போலீஸ்காரர்.
13 வயது பிஞ்சு
அதை மறைமுமாக வீடியோ எடுத்த பெண், மாவட்ட எஸ்பியிடம் அந்த ஆபாச வீடியோவை தந்துவிட்டார்.. பிறகு, அந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்..
அதேபோல, இதே உபியில் இன்னொரு சம்பவம் நடந்தது.. 13 வயது சிறுமியை 4 பேர் கடத்திக் கொண்டு போய், பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்..
இதனால் பாதிக்கப்பட்ட பெண், புகார் அளிப்பதற்காக, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்..
புகாரை பெற்றுக் கொண்ட, இன்ஸ்பெக்டர், அந்த போலீஸ் ஸ்டேஷனிலேயே அந்த சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்த கொடுமை நடந்தது.
கட்டிப்பிடித்து கொஞ்சல்
இப்போது இன்னொரு கொடுமை, இதே உத்தரபிரதேசத்தில், அதுவும் போலீஸ் ஸ்டேஷனிலேயே நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த பாங்கர்மாவ் ஸ்டேஷனில், தீப் சிங் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்..
அந்த ஸ்டேஷனுக்கு பெண் ஒருவர் வந்துள்ளார்.. அவர் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது.. அந்த பெண் எதற்காக ஸ்டேஷனுக்கு வந்தார் என்று தெரியவில்லை.. அந்த பெண்ணை கட்டிபிடித்து கொஞ்சி உள்ளார் ஏட்டு.. யூனிபார்ம்
யூனிபார்ம்
ஸ்டேஷனிலேயே கட்டில், தலைகாணி எல்லாம் இருக்கிறது.. அந்த கட்டிலில்தான் ஏட்டைய்யா உட்கார்ந்து கொண்டு, இவ்வளவு சேட்டைகளையும் செய்துள்ளார்.. அதுவும் யூனிபார்மிலேயே இந்த அக்கிரமத்தை செய்துள்ளர்..
இந்த சம்பவம் 2 வருடத்துக்கு முன்பு நடந்ததாக சொல்கிறார்கள்.. ஆனால், இந்த வீடியோ இப்போதுதான் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சஸ்பெண்ட் + வீடியோ
இதையடுத்து, இந்த ஏட்டுவும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, “பாங்கர்மாவ் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு தீப் சிங், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முன் கோட்வாலி ஸ்டேஷனில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, பெண் ஒருவருடன் ஆபாசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்..
அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதையடுத்து உன்னாவ் எஸ்பி உத்தரவின் பேரில் ஏட்டு தீப் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எதற்காக அந்த பெண்ணிடம் அவர் ஆபாசமாக நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.