நடிகர் பப்லு என்கிற பிருத்வி ராஜ் தன்னுடைய 56 வது வயதில் 23 வயது நிரம்பிய ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டுள்ளார். சின்னத்திரை வட்டாரத்தில் இந்த விவகாரம்தான் இப்போது பரபரப்புச் செய்தி.
சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தான் 57 வயதிலும் சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக இருக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் தன்னுடைய மனைவிதான் என அந்தப் பெண்ணை மேடை ஏற்றிய போது பப்லுவைத் தெரிந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனார்கள்.
ஏனெனில் பப்லுவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 25 வயதில் மகன் ஒருவரும் இருக்கிறார். அந்த மகன் ஆட்டிசம் குறையாடு உடையவர்.
பப்லுவின் இந்த இரண்டாவது திருமணம் குறித்து அவருடைய நட்பு வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.
‘’பப்லுவுக்கு ஆரம்பத்தில் பீனா என்கிறவருடன் திருமணம் ஆனது. ஆனா ’அஹத்’ங்கிற பையன் இருக்கிறார்.
அவர் ஆட்சம் குறைபாடு உடையவர். இதனாலேயே பப்லு ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் நடிப்பை விட்டு விலகி இருந்தார்.
அதேநேரம் தன்னுடைய மகனை அப்படிக் கவனிச்சிக்கிட்டார்.கூடவே இருந்து பையனுடைய எல்லாத் தேவைகளையும் இவரே பண்ணுவார்.
ஆனாலும் ஒருகட்டத்துல இந்தப் பிரச்னை அவரை ரொம்பவே மன ரீதியா பாதிக்க அதன் தொடர்ச்சியாக பப்லுவுக்கு அவரின் மனைவிக்கும் இடையிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுச்சு. நாளடைவில் அந்த விரிசல் பெரிசாக இருவரும் பிரிஞ்சு வாழத் தொடங்கினாங்க’’ என்கிறார்கள் அவர்கள்.
பப்லுவுக்கும் அவரின் மனைவி பீனாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உருவான அந்த சமயத்தில்தான் பப்லுவுக்கு மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண் நட்பாகி இருக்கிறார்.
56 வயதில் 23 வயது மலேசிய பெண்ணை மறுமணம் செய்து கொண்டாரா நடிகர் பப்லு?