சென்னை: உயிரிழக்கும் முன் ஜெயலலிதா பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த ரிப்போர்ட் 600 பக்கங்களுக்கும் மேல் உள்ளது.
இதில் பல அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர்.
அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அறிக்கை
இந்த நிலையில் உயிரிழக்கும் முன் ஜெயலலிதா பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது.,
இந்த ஆடியோவில் ஜெயலலிதா இருமியபடி பேசி உள்ளார். அவரிடம், அவரின் தனிப்பட்ட மருத்துவர் சிவக்குமார் பேசியது இந்த ஆடியோவில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது .
இதில் ஜெயலலிதாவின் குரல் மிகவும் சோகமாக இருக்கிறது. இந்த ஆடியோ அவர் உயிர் இழக்கும் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆடியோ
ஆனால் இந்த ஆடியோ உண்மையில் ஜெயலலிதா பேசிய ஆடியோவா என்பது சந்தேகமாக உள்ளது.
இந்த ஆடியோ உண்மையா என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆடியோவில் இன்னும் இரண்டு குரல்கள் கேட்கின்றன.
அதில் ஒரு குரல் சசிகலாவின் குரல் என்று கூறப்படுகிறது. இன்னொரு குரல் ஜெயலலிதாவின் தனி மருத்துவர் சிவக்குமாரின் குரல் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவும் உறுதி செய்யப்படவில்லை.
என்ன இருக்கிறது?
உறுதி செய்யப்படாத அந்த ஆடியோவில் ஜெயலலிதா.. நான் பேசுவது எதுவும் கேட்கிறதா? என்னால் முடியவில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
என்னால் முடியவில்லை. எனக்கு கிர் கிர் என்று உள்ளே கேட்கிறது. மூச்சு விடும் போது நன்றாக உய்ய் உய்ய் என்று கேட்கிறது.
நான் கூப்பிட்ட போது நீங்கள் வரவில்லையே. ஒன்று கிடக்க ஒன்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் .. நீங்களும் சரியில்லை என்று ஜெயலலிதா இதில் பேசியதாக கூறப்படுகிறது.
சசிகலா குரல் என்று சொல்லப்படும் குரல்.. கவலைப்படாதீங்க.. படுத்த பிறகு மாஸ்க் போட்டுக்கொள்ளலாம் என்று சொல்கிறார். இந்த ஆடியோவில் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.