அரியலூர்: கல்லூரி மாணவியை 17 வயது மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி கலைக்கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த அவர், சமீபத்தில் காணாமல் போனார். சக மாணவியின் அப்பா இறந்துவிட்டதாக கூறி அந்த மாணவி ஹாஸ்டலில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

வெளியே போன மாணவி திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஹாஸ்டல் சார்பாக மாணவியின் பெற்றோரிடம் புகார் அளிக்கப்பட்டது.

மாணவியின் பெற்றோர் அவரை தேட தொடங்கினர். மாணவி அப்பா இறந்ததாக கூறப்படும் சக மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தனர்.

அங்கும் அந்த மாணவி வரவில்லை என்று கூறப்படுகிறது. எங்கு தேடும் கிடைக்கவில்லை என்பதால் மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அந்த மாணவி ஏற்கனவே 6ம் வகுப்பில் இருந்து சிறுவன் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. AD அந்த சிறுவனும், மாணவியும் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்துள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே ஒருமுறை ஓடிப்போனதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பெற்றோர்கள் தலையிட்டு இவர்களை பிரித்து வைத்துள்ளனர்.

இதன் பின்பே மாணவியை தனியாக படிக்க வைக்க வேண்டும், மகளிர் கல்லூரியில் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் அந்த மாணவனை தேடி வந்தனர். அந்த மாணவர் திருச்சி மாவட்டம் முத்துவந்தூரில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் மாணவனின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தனர். அதில் மாணவி, அந்த மாணவனுடன் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் அந்த மாணவியின் அனுமதி இன்றி மாணவன் அவருடன் உடலுறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

மாணவியின் அனுமதி இன்றி மாணவன் பலமுறை அவரை வன்புணர்வு செய்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் உடனே அந்த மாணவனை கைது செய்தனர். அந்த மாணவனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

அந்த பெண் மைனர் என்பதால் அவருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனுமதியுடன் உடல் உறவு மேற்கொண்டாலும், மைனர் பெண், ஆணுடன் உடல் உறவு மேற்கொள்வது குற்றம் என்பதால் அந்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Share.
Leave A Reply