லிஸ் டிரஸ் ராஜினாமா செய்ததையடுத்து தற்போது பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.களின் அதிக ஆதரவைப் பெற்று இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகப் போட்டி இன்றி தேர்வாகியுள்ளார்.

பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றுள்ளார்.

பிரிட்டனில் நிலவும் பொருளாதார சிக்கலைச் சமாளிக்க முடியாமல் லிஸ் டிரஸ் அண்மையில் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியில் எம்.பி.களின் அதிக ஆதரவைப் பெற்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரிஷி சுனக் – க்கு எதிராகக் களத்திலிருந்த பென்னி மார்டாண்ட் சரியாக 6.30 மணிக்கு ரிஷி சனக்- விற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் பதவியில் நிற்க விருப்பம் தெரிவிக்க இன்று இந்திய நேரபடி 6.30 மணி வரையே இருந்த நிலையில், பென்னி மார்டாண்ட் விலகியுள்ளார்.

பிரிட்டன் அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவிய நிலையில் தற்போது இந்த முடிவு வெளிவந்துள்ளது.

இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமைக்குரிய தகுதியை ரிஷி சுனக் தற்போது பெற்றுள்ளார்.

பிரதமராக ரிஷி, பிரிட்டனின் பொருளாதாரத்தை நிலை கொண்டுவரத் திட்டங்களை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

பொருளாதார மேம்பாடு, பண வீழ்ச்சியைச் சரி செய்தல், கட்சியில் ஒற்றுமையைக் கொண்டுவருதல் என்று ரிஷி முன் பெரும் பொறுப்புக்கள் உள்ளது.

Share.
Leave A Reply