மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் இசைமாலைதாழ்வு பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியொன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலிருந்த மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் வாகனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து சென்றவர்களே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், 27 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply