புதுடெல்லி: டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது.

அதே போன்று டெல்லியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவர் அஞ்சன் தாஸை 22 துண்டுகளாக வெட்டி கொன்றதாகக் கூறி ஒரு பெண்ணையும் அவரது மகனையும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.

இந்த கொலை கடந்த மே மாதம் நடந்து உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூற்றப்படுவதாவது:-

டெல்லி நகரின் கிழக்குப் பகுதியில் பாண்டவ் நகரில் வசித்து வந்தவர் அஞ்சன் தாஸ், லிப்ட் மேனாகப் பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி பூனம். பூனம் (48) தனது கணவர் அஞ்சன் தாஸை 2017 இல் திருமணம் செய்து கொண்டார்.

பூனத்தின் முதல் கனவ்ர் கல்லு மரணம் அடைந்து விட்டார். அவருக்கு பிறந்த மகன் தீபக் ( 25 ) அஞ்சனுக்கு பீகாரில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி எட்டு குழந்தைகள் உள்ளனர்.

அஞ்சன் தான் வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்து உள்ளார்.மேலும் அஞ்சன் தாஸ் பூனம் நகைகளை விற்று பணத்தை தனது எட்டு குழந்தைகளுடன் பீகாரில் வசிக்கும் தனது முதல் மனைவிக்கு அனுப்பியதை அறிந்து கோபமடைந்தார்.

மேலும் தீபக்கின் மனைவியை அஞ்சன் தாஸ் தப்பான கண்ணோட்டத்தில் அணுகி உள்ளார். தாஸ் தனது மனைவியை துன்புறுத்தியதால் இந்த கொலை திட்டத்திற்கு சம்மதித்ததாக தீபக் போலீசாரிடம் கூறியுள்ளார்.

தாய்-மகன் அஞ்சனுக்கு மதுவை குடிக்க வைத்து, அதில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தனர்.

பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர். ஒரு நாள் முழுவதும் ரத்தம் வடியட்டும் என அப்படியே போட்டு வைத்து உள்லனர்.

பின்னர் அந்த பெண்ணும் அவரது மகனும் அவரது உடலை 10க்கும் அதிகமான தூண்டுகளாக வெட்டி பிரிஜில் வைத்து உள்ளனர்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பாண்டவ் நகர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தூவி உள்ளனர்.

போலீஸ் ஆறு துண்டுகளை மீட்டுள்ளனர், ஆனால் உடல் இன்னும் காணவில்லை. கண்காணிப்பு கேமிராவில் தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல் பாகங்களை கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

தீபக் இரவில் கையில் பையுடன் செல்வது தெரிந்தது. அவருக்கு பின்னால் அவரது தாயார் பூனம் செல்வது பதிவாகி இருந்தது.

கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்தனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.

தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவரது உடல் பாகங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

அப்போது தான் அது தாசின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் அஞ்சன் தாஸ் காணாமல் போய் ஆறு மாதங்களாகியும், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை.

இதையடுத்து பூனம் மற்றும் தீபக் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட பூனம் கூறியதாவது;- அஞ்சன் தாஸ் என் மகள்,மருமகள் மீது தவறான எண்ணம் கொண்டிருந்தார்,

அதனால்தான் நான் அவ்வாறு செய்தேன். என் மகன் அவரை கத்தியால் கொன்றான், நான் அதை செய்யவில்லை என கூறினார்.

Share.
Leave A Reply