கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இருந்து இன்று இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
இதில், முல்லைத்தீவு – மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பகிரதன் என்ற இளைஞரே விநாயகபுரம் கந்தன் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.