சிவாஜி கூட நடித்தது எனக்கு வாழ்நாள் பெருமை; திரையுலகமும் அரசும் அவருக்கு போதிய மரியாதை செய்யவில்லை; புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா பேச்சு
க்கு போதிய மரியாதையை திரையுலகமும் அரசும் செய்யவில்லை என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா உரையாற்றினார்.
சிவாஜி கணேசன் எங்கள் ஊருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தப்போது சகோதரர் பாஸ்கர், அவரை தொட்டுவிட்டு மூன்று காய்ச்சலில் கிடந்தார்.
அந்த அளவுக்கு மரியாதையோடு நாங்கள் வியர்ந்து பார்த்த மனிதர் சிவாஜி. என்னை செல்லமாக ராசா என்றே அழைப்பார். பிரசாத் ஸ்டூடியோவுக்குள் வரும்போது உள்ளே வரலாமா என என்னிடம் சிவாஜி அனுமதி கேட்டார். எனக்கு கண்ணீர் வந்து விட்டது.
நேரம் தவறாமை அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு. நான் லேட்டாக வந்தப்போது நீயுமா லேட் என கிண்டலாக கேட்டார்.
நான் நீங்கள் தான் 25 வருஷத்துக்கு முன்னாடி சீக்கிரம் வந்துட்டிங்க, நான் சரியான நேரத்திற்கு தான் வந்திருக்கிறேன் என சொன்னேன்.
சிவாஜி சிகரெட் பிடிச்ச மாதிரி நடிச்சிருக்காரே தவிர, சிகரெட்டை படத்திற்காக கூட பிடிச்சதில்ல. அவர் திரைப்படங்களில் நடிப்பதே இல்லை, அந்த கேரக்டராக வாழ்ந்து விடுவார்.
தேவர் மகன் ரெக்கார்டிங்கின்போது, நான் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டேன். அப்போது எனக்கு அவர் முத்தம் கொடுத்தார்.
அது அழகிய புகைப்படமாக வந்தது. அதை வாலி சார் பார்த்துட்டு, பத்மினிக்கு கூட இப்படி முத்தம் கொடுத்திருக்க மாட்டார் என நகைச்சுவையாக கூறினார்.
சாதனை படத்தில் அவர்கூட ஒரு பாடலில் நடித்தப்போது, என் கூட நடிக்கிறியா என கேட்டார், நான் இல்லை நீங்க தான் என் கூட நடிக்கிறிங்க, நான் இளையராஜாவா தான் இந்த வர்றேன்னு சொன்னேன்.
உடனே அவர், கேமரா ஆன் ஆகட்டும் அப்ப பார்க்கலாம் என நக்கலாகச் சொன்னார். அவர்கூட நான் நடித்தது எனக்கு வாழ்நாள் பெருமை என்று இளையராஜா நெகிழ்வாக கூறினார்.
மாஞ்சோலை கிளி தானோ பாடல் நல்லா இருக்கு, அதை நல்லா நடிக்க கூடியவர்களுக்கு நீ போட்டிருக்கனும், ஆனா பாரதிராஜாவுக்கு போட்டிருக்க என ஜாலியாக சொன்னார் என பாரதிராஜாவை மேடையில் வைத்துக் கொண்டே இளையராஜா பேசினார்.
கலை உலகம் அவருக்கு பாராட்டு விழா எடுத்தப்போது, அவருடைய சிலைக்கு நான் முழுவதுமாக பணம் கொடுத்தேன், அதைத் தெரிந்துக் கொண்ட அண்ணன் சிவாஜி, யாரை மறந்தாலும் இளையராஜாவை மறக்கக் கூடாது என சொன்னார்,
இதை நான் தம்பட்டம் அடித்துக் கொள்ள சொல்லவில்லை, அவருக்கான மரியாதையை திரையுலகமும், அரசும் செய்யவில்லை என கண்கலங்கி இளையராஜா பேசினார்.