கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை தொடரை அர்ஜென்டினா அணி கைப்பற்றி இருந்தாலும் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே கொடுத்த அதிர்ச்சியை நிச்சயம் யாராலும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல விட முடியாது.
முதல் பாதியில் இரண்டு கோல்கள் அடித்து அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்க இரண்டாவது பாதியில் 2 நிமிட இடைவெளிக்கு மத்தியில் இரண்டு கோல்களை அடித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருந்தார் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே.
இதன் பின்னர் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடிக்க, போட்டி முடிய ஒரு சில நிமிடங்கள் இருக்கும் போது தனது மூன்றாவது கோலை அடித்தார் எம்பாப்பே.
இதனால் பெனால்டி சூட் அவுட் வாய்ப்பு வரை சென்றது. கடைசியில் 4 -2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்பந்து உலக கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றியது அர்ஜென்டினா அணி.
ஒரு பக்கம், அர்ஜென்டினா வெற்றி பெற்றிருந்தாலும் தனி ஒரு ஆளாக பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அர்ஜென்டினாவை எதிர்த்து போராடியது பற்றியும் தற்போது வரை கால்பந்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடரை பிரான்ஸ் அணி வெல்ல காரணமாக இருந்த எம்பாப்பே, தொடர்ந்து ஒரு நட்சத்திர வீரராக உருவாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் பாராட்டியும் வருகின்றனர். உலக அளவில் எம்பாப்பே கவனம் பெற்றுள்ள நிலையில், அவரின் காதல் உறவு குறித்து சில தகவல்கள் இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
23 வயதான எம்பாப்பே, முதலில் ஏம்மா ஸ்மேட் என்ற நடிகையுடன் காதலித்து வந்ததாக கூறப்பட்டது.
பிரான்சில் பிரபலமாக இருக்கும் அந்த நடிகையும், எம்பாப்பேயும் அடிக்கடி டேட்டிங் சென்ற ஃபோட்டோக்கள் அதிகம் வெளியாகி அவர்கள் காதலிக்கிறார் என்ற தகவலும் வைரலானது.
அப்போது இது குறித்து ஏராளமான விவாதங்கள் நடைபெற்ற நிலையிலும் காதலில் இருப்பதாக அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் அவர்கள் வெளியே டேட்டிங் செல்வதும் அப்படியே நின்று போனதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து திருநங்கையான ஜனெஸ் ராவு என்பவருடனும் எம்பாப்பே பல இடங்களில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
ஐனெஸ் ராவு பிளேபாய் நாளிதழின் கவரில் இடம் பிடித்த முதல் திருநங்கை என்ற புகழை பெற்றவர் ஆவார்.
இவருடனும் எம்பாப்பே நிறைய இடங்களில் டேட்டிங் சென்றதாக சொல்லப்படும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஸ்டெல்லா மேக்ஸ்வெல் என்ற முன்னாள் விக்டோரியா சீக்ரெட் மாடல் ஒருவரையும் எம்பாப்வே தொடர்ந்து டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றது.
இப்படி எம்பாப்பே கால்பந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் சமயத்தில் அவரது காதல் பக்கங்கள் குறித்து இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தாலும் அது அவரது சொந்த விருப்பம் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.