தெலங்கானாவின் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலத்தில் உள்ள சென்னாரம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயது பெண் காவலர் நாகமணியும், அவரது 21 வயது மகள் தொள்ளா திரிலோகினியும் காவல் உதவி ஆய்வாளர் பணி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற அந்த தேர்வில் உடல் தகுதித் தேர்வில் இருவரும் தேர்ச்சி பெற்றதுடன் எழுத்துத் தேர்வுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
தெலங்கானா தாய் மகள் போலீஸ் வேலைக்கு பயிற்சி
2007ஆம் ஆண்டில் தெலங்கானா காவல் துறையில் ஊர்க்காவல் படையில் சேர்ந்த நாகமணி, பின்னர் காவலராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இவரும் மகளும் ஒரே நேரத்தில் எஸ்ஐ பணி தேர்வுக்கு தயாராகி வரும் அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.