மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிஓடை வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற விவசாயி  ஒருவரை முதலை இழுத்துச் சென்று காணாமல்போன நிலையில், நேற்று புதன்கிழமை (28) மாலை கடற்படையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தம்பாலம்வெளி கொடுவாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சதாசிவம்  சிவபாபு என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டார்.

மாவடி ஓடை பகுதியில் வேளாண்மைக்கு காவல் காக்க அமைக்கப்பட்ட குடிசையில் இருந்து வேளாண்மை காவல் காத்து வந்து சதாசிவம் சிவபாபு அருகிலுள்ள வண்ணாத்திவில் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக கடந்த 26 ஆம் திகதி பகல் இறங்கிய போது அவரை முதலை இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளார்.

இதணையடுத்து அம்பாறை ஒலுவில் கடற்படையினரின் உதவியுடன் பொலிசார் ஆற்றில் காணாமல் போனவரை நேற்று புதன்கிழமை மாலை தேடிவந்த நிலையில் முதலையால் கை கால்கள் கடிக்கப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்கா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

Share.
Leave A Reply