இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதையும் பார்த்திருப்போம்.
ஒரு திருமணம் நடைபெறும் போது அதனை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அடுத்தவர்கள் கவனம் பெறும் அளவுக்கு யோசித்து யோசித்து செய்வார்கள்.
யாருமே செய்யாத வகையில் திருமண போட்டோ ஷூட் ஐடியாக்களை பயன்படுத்துவது, ரேஷன் கார்டு, விமான டிக்கெட், மருந்து அட்டை என திருமண அழைப்பிதழில் கூட புதுமை காட்டுவது என இப்படி திருமணத்தை சுற்றி வைரல் ஆகும் விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
திருமண மேடையில் நண்பர்கள் கொடுக்கும் பரிசு, மணமக்களின் நடனம் உள்ளிட்ட விஷயங்கள் கூட பலரையும் வெகுவாக கவரும்.
இப்படி விதவிதமாக யோசித்து நாம் செய்யும் அதே சமயத்தில், சில எதிர்பாராத சம்பவங்கள் கூட நம்மை சுற்றி அரங்கேறும்.
திருமணத்திற்கு அனைவரும் தயாராக இருக்கும் போது அங்கே சில நிகழ்வுகள் ஏற்பட்டு மொத்தத்தையும் அப்படியே தலைகீழாக திருப்பி போடும்.
அப்படி ஒரு சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் அதிக வைரலாகி பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவின் படி, Ghana நாட்டின் Kasoa என்ற பகுதியில் இந்த திருமணம் நடக்க இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
அந்த சமயத்தில், திடீரென திருமணம் வேண்டாம் என அந்த மாப்பிள்ளை மறுத்து அங்கிருந்த கிளம்ப முற்படுவது தெரிகிறது.
மறுபக்கம், மணப்பெண் மாப்பிள்ளையிடம் திருமணத்தை நிறுத்த வேண்டாம் என கெஞ்சி கொண்டிருக்க, ஆனாலும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் அங்கிருந்து அந்த வாலிபர் கிளம்பி செல்கிறார்.
இதற்கான காரணம் குறித்து வெளியான தகவலின் படி, அந்த மணப்பெண் தனது திருமணத்திற்கு முன்பாக அவரது முன்னாள் காதலனை பார்த்து விட்டு வந்ததாகவும், இது குறித்த தகவலை மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர் அவரிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
திருமண நாளில் கூட முன்னாள் காதலனை தனது வருங்கால மனைவியாக தான் கருதிய பெண் சந்தித்து விட்டு வந்ததை அறிந்த மாப்பிள்ளை, உடனடியாக திருமணத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து கிளம்ப முடிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
திருமணத்தை நிறுத்த வேண்டாம் என மணப்பெண் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் மாப்பிள்ளை திருமணத்திற்கு தயாராகவில்லை என தெரிகிறது.
இது தொடர்பான வீடியோ அதிக வைரலாகி வரும் சூழலில், வேறு ஏதேனும் காரணத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்றும் இணையவாசிகள் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.