Colombo (News 1st) மன்னார் – தாராபுரத்தில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பொலிஸ் டிஃபென்டரின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மன்னார் நீதவான் முன்னிலையில் நேற்று (29) மாலை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தாராபுரத்தில் பொலிஸ் டிஃபென்டருடன் மோட்டார் சைக்கிள் மோதி நேற்று காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த 31 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் நோக்கி பயணித்த டிஃபென்டர், எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ் ஒன்றை முந்திச்செல்ல முயற்சித்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இரு சாரதிகளினதும் கவனயீனமே விபத்திற்கு காரணம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply