தாயால் விஷம் கொடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளை உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பிள்ளை பொரளை சீமாட்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரிகம- லோலுகொட பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர் தனது 5 மற்றும் 8 வயதான இரு பிள்ளைகளுக்கு விஷத்தை பருகக் கொடுத்து தானும் பருகியுள்ளார்.

எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்ட குறித்த மூவரும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிள்ளைகள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக சீமாட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே 5 வயதுடைய பிள்ளை நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply