பொதுவாக, லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது, கேரளா, துபாய், கனடா, அமெரிக்காவின் சில பகுதிகள் என பல இடங்களில் அதிகாரபூர்வமாக இயங்கப்பட்டும் வருகிறது.
மேலும் இந்த லாட்டரி வாங்கும் பழக்கம் கூட நிறையும் பேருக்கு இருப்பதால், எப்படியாவது இதன் மூலம் தங்கள் வாழ்க்கை மாறி விடாதா என்ற நம்பிக்கையுடனும் செயல்படுவார்கள்.
அதே போல, லாட்டரியில் கிடைத்த பரிசு மூலம் பலரது வாழ்க்கை கூட தலைகீழாக மாறிய செய்திகளையும் நாம் நிறைய கடந்து வந்திருப்போம்.
அந்த வகையில், நபர் ஒருவருக்கு லாட்டரியில் பரிசு கிடைத்துள்ள நிலையில், அதற்கான காரணமாக இணையத்தில் வைரலாகி வரும் தகவல், பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது.
அமெரிக்காவின் பகுதியை சேர்ந்தவர் வெஸ்ஸி பிரன்சுவிக். இவருக்கு தற்போது 55 வயதாகும் நிலையில், இவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளார்.
மேலும் அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு சுமார் 33,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 33 லட்ச ரூபாய்) பரிசும் கிடைத்துள்ளது.
மேலும் இந்த லாட்டரி டிக்கெட் வாங்க வெஸ்ஸி சொன்ன காரணம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
வெஸ்ஸியின் தந்தை உயிரிழந்து விட்டார். முன்னதாக அவர் தீவிரமாக லாட்டரி விளையாடி வந்தார் என்றும் அப்படி ஒரு சூழலில் தற்போது மந்திரவாதி ஒருவர் மூலம் கல்லறையில் இருந்து மகன் லாட்டரி வாங்க வேண்டும் என அறிவுரை வழங்கியதாகவும் வெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
லாட்டரி வென்றதில் பெரும்பாலான தொகை எதிர்கால திட்டங்களுக்காக வங்கியில் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ள வெஸ்ஸி, குழந்தைகளின் கல்வி கடன்களுக்காக இந்த பணத்தில் கொஞ்சம் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த தந்தை மந்திரவாதி ஒருவர் மூலம் லாட்டரி விளையாடும் படி தன்னை அறிவுறுத்தியதாக நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ள தகவல், தற்போது பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், பலரும் தங்களின் கருத்துக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.