சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்திடம் தமிழ்மிரர் ஊடகவியலாளர் பா.நிரோஸால் என்பவர் கோரப்பட்ட தகவல்களுக்கு, “பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கிற வகையில் முழுமையான, சரியான தகவல்களை இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக” இலங்கை இராணுவம் சாட்சியம் வழங்கியுள்ளது.
1111/2022 என்கிற இலக்கத்தைக் கொண்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேன்முறையீடு, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்தன தலைமையில் இன்று (04) பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே இலங்கை இராணுவம் இவ்வாறு தெரிவித்திருந்தது.
தகவலறியும் ஆணைக்குழு முன்பாக இலங்கை இராணுவம் வழங்கிய சாட்சியத்தின் முழுமையான தகவல்களை 17ம்திகதிக்கு முன்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது…