சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2 ஆவது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக தகவல்கள் கூறுகின்றது.

இவருடைய மனைவி பெயர் பபிதா. இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்த நிலையில், தரைத் தளத்தில் சொந்தமாக அழகு நிலையம் ஒன்றையும் பபிதா நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே கடந்த ஒன்றாம் தேதி புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக தனது நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார் நந்தகுமார்.

அதேபோல பபிதாவும் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கும் சென்றுள்ளார்.

மீண்டும் வீட்டுக்கு திரும்பிய நந்தகுமார் நண்பர்களை அழைத்து மது அருந்தி கொண்டாடியதாகவும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக மறுநாள் வீட்டுக்கு வந்த பபிதா மற்றும் நந்தகுமார் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் வழக்கம் போல அவர்கள் அனைவரும் இரவு தூங்க சென்றுள்ள நிலையில், காலையில் குழந்தைகள் பபிதாவை பார்த்தபோது அவர் எழவில்லை என சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த போது சபிதா ஏற்கனவே இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பபிதா கழுத்தில் காயம் இருப்பது தெரிய வர, தகவலின் பெயரில் போலீசார் உடனடியாக சம்பவ இடம் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் பபிதா கழுத்திற்கு அருகே எலும்பு உடைந்து பலியாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அப்படி ஒரு சூழலில் இது தொடர்பாக நந்தகுமார் மீதும் போலீசாருக்கு சந்தேகம் உருவாகியுள்ளது.

அப்போது அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நண்பர்களுடன் வீட்டில் மது அருந்தி இருந்ததாகவும் இது பற்றி மனைவி சபீதா இரவு கத்தி கூச்சல் போட்டு தன்னோடு தகராறில் ஈடுபட்டதாகவும் ஆத்திரத்தில் கையால் அவர் கழுத்தை நெரித்த போது எதிர்பாராத விதமாக இறந்து விட்டதாகவும் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

எதிர்பாராமல் நடந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் எதுவும் தெரியாத போல் இரவு தூங்க சென்று விட்டதாகவும் ஆனால் போலீசார் நாடகத்தை கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ளார்.

மனைவியை கொலை செய்ததன் பேரில் நந்தகுமாரை கைது செய்து போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply