புத்தாண்டு நாளில் மாமியாரும் மருமகனும் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தின் சியாகாரா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

ரமேஷ் தன்னுடைய மூத்த மகளான கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

நாராயண் கிஷ்ணா தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளை நாராயண் ஜோகி மாமனார் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

அப்படித்தான் கடந்த டிசெம்பர் 30ஆம் தேதியும் மனைவி கிஷ்ணாவுடன் நாராயண் தனது மாமனார் ரமேஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது புத்தாண்டிற்கு முந்தைய நாள் இரவு மது குடித்து ஜாலியாக கொண்டாடலாம் என மாமனார் ரமேஷிடம் தெரிவித்துள்ளார் மருமகன் நாராயண். அதன்படி அனைவருக்கும் மட்டன் கறி சுட சுட பறிமாறப்பட்டுள்ளது. கறி சாப்பாடு மட்டுமின்றி, மருமகனுடன் ஜாலியாக இரவு முழுவதும் மதுவை குடித்துவிட்டு நல்ல போதையில் உறங்கியுள்ளார் ரமேஷ்.

விடிந்ததும் போதை தெளிந்து எழுந்த போது தான் மாமனார் ரமேஷுக்கு புத்தாண்டு நாளில் பேரதிர்ச்சி காத்திருந்தது.

தனது மனைவியை சொந்த மருமகனே இழுத்துச் சென்று வீட்டை விட்டு ஓடியுள்ளார். அப்போது தான் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமே மாமியாருக்கும் மருமகன் நாராயணுக்கும் இருந்த கள்ளக்காதல் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply