உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொழிநுட்ப யுக்தியை கையாளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதற்கமைய, தமிழரசு கட்சி வீட்டுச் சின்னத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதோ தமிழரசு கட்சி பிரிந்து தனித்து போட்டியிடுவதோ இல்லை என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (07) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இல்லத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

Share.
Leave A Reply