உக்ரைன் தலைநகர் கிவ் அருகில் உள்ள மஜீல்லா நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷியபடையினர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

கிவ்: உக்ரைன் மீது ரஷியா கடந்த 11 மாதமாக நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.

இந்த போரால் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகி விட்டனர்.

இந்த நிலையில் ஆர்த்தோடெக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரஷியா அறிவித்த 36 மணி நேர போர் நிறுத்தம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து மீண்டும் ரஷியா தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. உக்ரைன் வீரர்களும் அவர்களை எதிர்த்து போராடி வருகின்றனர்.

உக்ரைன் தலைநகர் கிவ் அருகில் உள்ள மஜீல்லா நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரஷியபடையினர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

உக்ரைன் வீரர்களின் தற்காலிக ராணுவதளத்தின் மீது அடுத்தடுத்த ராக்கெட்டுகளை வீசினார்கள்.

இதில் ராணுவமுகாம் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தது. ரஷியாவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு 600 உக்ரைன் வீரர்கள் இறந்ததாக ரஷியா தெரிவித்து உள்ளது.

ஆனால் இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என கிராம டோர்லக் மேயர் தெரிவித்து உள்ளார்.

ஒரு புறம் இருநாடுகளுக்கும் இடையே சண்டை நடந்து வந்தாலும் மறுபுறம் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்கும் பணியும் நடந்து வருகிறது.

உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட 50 ரஷிய வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளது.

இதேபோல் ரஷிய படைகளிடம் சிக்கிய 50 உக்ரைன் வீரர்களையும் அந்த நாடு விடுவித்து இருக்கிறது.

இதுவரை 36 முறை கைதிகள் பரிமாற்றம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் ரஷியா போர் ஜெலன்ஸ்கி

 

Share.
Leave A Reply