கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தர்மபுரம் – கல்லாறு பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட 24 வயதான இளைஞர் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply