12.5 கிலோ நிறையடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபா 500 முதல் ரூபா 750 வரை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறே 5 கிலோ நிறையுடைய சிலிண்டர் மற்றும் 2.3 கிலோ நிறையுடைய சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விலை திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்றும், உலக சந்தையில் ஏற்படும் விலை உயர்வுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போது 4,409 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன் 5 கிலோ நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,870 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை, 2.3 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 38 ரூபாவால் குறைக்கப்பட்டு 822 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply