கூகுள் நிறுவனம் தனது 12000 பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவதாக இன்று அறிவித்துள்ளது.
கூகுளின் பணியாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஆவணமொன்றில் சுந்தர் பிச்சை இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அதில் தெரிவித்துள்ளது.
நான் உங்களுடன் ஒரு கடினமான விடயத்தை பற்றி பேசவேண்டியுள்ளதுநாங்கள் எங்கள் பணியாளர்களில் 12000 பேரை வேலையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட எங்களின் பணியாளர்களிற்கு நாங்கள் ஏற்கனவே கடிதங்களை அனுப்பியுள்ளோம்இஏனைய நாடுகளில் இந்த செயற்பாடு உள்ளுர் சட்டங்கள் நடைமுறைகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்படும்.
இதன் அர்த்தம் என்னவென்றால் நாங்கள் பணிக்கு அமர்த்துவதற்காக கஸ்டப்பட்ட – நான் அவர்களுடன் பணியாற்றுவதை விரும்பிய மிகவும் திறமையான பலருக்கு பிரியாவிடை அளிக்கவேண்டிய நேரம் வந்துள்ளது என்பதே இதன் அர்த்தம்.
கூகுளில் பணிபுரிபவர்களின் வாழ்;கையில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விடயம் என்னை பாதித்துள்ளது.
இந்த தீர்மானத்தை எடுக்கவேண்டிய சூழ்நிலை உருவானமைக்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
கடந்தஇரண்டு வருடங்களில் நாங்கள் மிகப்பெரும் வளர்ச்சியை பார்த்துள்ளோம்அந்த வளர்ச்சிக்கு தகுந்த விதத்திலும் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கும் நாங்கள் வேறு விதமான பொருளாதார யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டோம் அதனை இன்று நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.
எங்கள் நோக்கத்தின் வலுகாரணமாகவும் எங்கள் உற்பத்திகளின் பெறுமதி செயற்கை நுண்ணறிவில் இல் எங்களின் முன்னைய முதலீடுகள் காரணமாகவும் எங்கள் முன்னால் உள்ள பாரிய சந்தர்ப்பங்கள் குறித்துநான் நம்பிக்கையுடன் உள்ளேன்.
இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்துவதற்காக நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது.
எனவே ஒரு நிறுவனமாக எங்களின் உயர்ந்த முன்னுரிமைகளுடன் எங்கள் மக்கள் மற்றும் பணி சீரமைக்கப்படுவதை உறுதி செய்ய தயாரிப்பு பகுதிகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து முழுமையான மீளாய்வை மேற்கொண்டோம்.
இந்த மதிப்பாய்வின் அடிப்படையில் சில பணிகளில் இருந்து நீக்கங்களை நாங்கள் மேற்கொள்கின்றோம்.
எங்களை விட்டு விலகிச்செல்லும் கூகுள் பணியாளர்களிற்கு உலகின் முழுவதும் மக்களிற்கும் வர்த்தகத்திற்கும் உதவுவதற்காக கடுமையாகபணியாற்றியமைக்காக நன்றி
உங்களின் பங்களிப்புகள் ஈடுஇணையற்றவை நாங்கள் அவற்றை மிகவும பெரிய விடயமாக கருதுகின்றோம்.
இந்த மாற்றம் இலகுவாக காணப்படாது.பணியிலிருந்து நீக்கப்படுபவர்களிற்கு புதிய வேலை கிடைக்கும் வரை நாங்கள் அவர்களிற்குஉதவுவோம்.
ஆகக்குறைந்தது 60 நாட்களிற்கு நாங்கள் அவர்களிற்கு ஊதியம் வழங்குவோம்.
பணியிலிருந்து நீக்கப்படும் பணியாளர்களிற்கான ஊதியங்கள் மற்றும் அனுகூலமான விடயங்களை நாங்கள் அவர்களிற்கு வழங்குவோம்.
2022 மேலதிக கொடுப்பனவையும்இமீதமுள்ள விடுமுறை நேரத்தையும் வழங்குவோம்.
பாதிக்கப்பட்டவர்களிற்கு ஆறுமாத சுகாதார நலன்கள் வேலைவாய்ப்பு சேவைகள் மற்றும் குடியேற்ற ஆதரவை வழங்குவோம்.
அமெரிக்காவிற்கு வெளியே குறிப்பிட்ட நாடுகளின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளிற்கு ஏற்ப நாங்கள் உதவுவோம்.