பிப்ரவரி 14-ஆம் தேதியை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள காதலர்கள் காதலர் தினத்தை மிகவும் உற்சாகமாக கொண்டாடி இருந்தனர்.

புதிதாக தங்களது காதலர்களிடம் காதலை வெளிப்படுத்தவும், ஏற்கனவே காதலித்து வரும் நபர்கள் சர்ப்ரைஸ் ஆக ஏதாவது பரிசளிக்கவும் இந்த காதலர் தினத்தை தேர்ந்தெடுத்து கொண்டார்கள்.

அதில், தங்களுக்கு மனதுக்கு மிகவும் பிடித்தமான நபர்களிடம் காதலை வெளிப்படுத்தும் போது அதனை வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக மாற்றவும் முயற்சித்து பல்வேறு புதுவிதமான விஷயங்களை முயற்சிப்பார்கள்.

அப்படி முயற்சித்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தான் இணையத்தில் பேசு பொருளாகி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் உள்ள கடற்கரையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஸே என்ற நபர் தனது நீண்ட நாள் தோழியான ஸாய் என்பவரிடம் காதலை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக சிட்னியில் உள்ள கூகி என்னும் கடற்கரையில் மணலில் அசத்தலான வண்ணமயம் நிறைந்த ஏற்பாடுகளை ஸே செய்ய அங்கே இருந்த பார்வையாளர்களையும் அது வெகுவாக கவர்ந்திருந்தது.

தனது தோழி சாயிடம் காதலையும் ஸே வெளிப்படுத்தும் தருணத்தையும் அனைவரும் எதிர்நோக்கி அங்கே காத்திருந்தார்கள்.

அந்த சமயத்தில் தான் யாரும் எதிர்பார்க்காத பெரிய ட்விஸ்ட் ஒன்று அங்கே நடந்தது. காதலி முன்பு மண்டியிட்டு காதலை ப்ரொபோஸ் செய்ய ஸே முயன்ற சமயத்தில் தனது கையில் இருந்த வைர மோதிரத்தை காதலியின் கைவிரலில் போட முயன்றுள்ளார்.

ஆனால் அவர் போட்டு விடுவதற்கு முன்பாகவே அது தவறுதலாக கடற்கரை மண்ணில் விழுந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தனை அழகாக அனைத்து விஷயங்களையும் ஏற்பாடு செய்து, மோதிரம் அணியும் சமயத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததால் சற்று பரபரப்பும் அங்கே உருவானது.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் மண்ணில் சிக்கிய வைர மோதிரத்தையும் ஒரு வழியாக மீட்டு தனது காதலியின் கை விரலிலும் அணிந்துள்ளார் ஸே.

இந்த நிகழ்வுகளை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட பெரிய அளவில் பேசு பொருளாக ஆனதுடன் மட்டுமில்லாமல் ஏராளமான செய்திகளிலும் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SAI. (@wasaibi.xo)

Share.
Leave A Reply