திருவனந்தபுரம்: தமிழக கேரள எல்லையில் காதலனுக்கு காதலி விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் விசாரணை நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், குற்றப்பத்திரிக்கை குறித்து சில தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு வற்புறுத்தி அழைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரளாவின் பாறசாலை மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன்.
இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23).பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வரும் ஷாரோன் ராஜ் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த எம். ஏ படிக்கும் மாணவியான கிரீஷ்மா(22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி அன்று நண்பர் ஒருவருடன் ஷாரோன் ராஜ் காதலி கிரீஷ்மா வீட்டுக்கு சென்றார்.
அப்போது நண்பர் வீட்டின் வெளியில் நிற்க, ஷாரோன் ராஜ் மட்டும் காதலியின் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார். தொடர்ந்து நண்பருடன் அவர் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது திடீரென நண்பரிடம் தனக்கு வயிறு வலிப்பதாக ஷாரோன் ராஜ் கூறினார். ஏன் என்று நண்பர் கேட்க, காதலி கிரீஷ்மா வீட்டில் கசாயம் மற்றும் குளிர்பானம் குடித்தேன். அதில் இருந்து வயிற்று வலி தொடங்கிவிட்டது என்று கூறினார்.
வலி நிற்கவில்லை
ஆனால் வலி தொடர்ந்து அதிகரித்ததால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் அவருக்கு வலி நிற்கவில்லை. இதனால் ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலினின்றி ஷாரோன் ராஜ் கடந்த ஆண்டு ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கல் நெஞ்சம்
முன்னதாக உடல்நிலை பாதிக்கப்பட்டபோது ஷாரோன், காதலி கிரீஸ்மாவிடம் பேசும் ஆடியோ அப்போது வைரல் ஆனது.
அதில், “நீ கொடுத்த கசாயத்தைக் குடித்ததில் எனக்கு வாயில் புண் ஏற்பட்டுள்ளது. கல்லீரல், கிட்னியும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்” என்று அந்த ஆடியோவில் கூறுகிறார்.
அப்போதும் காதலி கிரீஸ்மா கல் நெஞ்சத்தோடு தான் வழக்கமாகக் குடிக்கும் கசாயத்தைதான் உனக்கும் தந்தேன் என்று கூறுவார். இப்படியாகஆடியோக்கள் முடியும்.
வாக்குமூலம்
எப்படி கண்டுபிடித்தார்கள். மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தபோது ஷாரோன்ராஜின் ரத்தமாதிரிகள் சோதிக்கப்பட்டது.
அதில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. அவர் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மரண வாக்குமூலத்திலும், காதலி கிரீஸ்மாவை விட்டுக் கொடுக்கவில்லை.
அவர் தனக்கு விஷம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்கவில்லை என்றே கூறினார்கள். ஆனால் போலீசாரின் தொடர் முயற்சிக்கு பின்னர் கிரீஸ்மா கைது செய்யப்பட்டார்.
நெடுமங்காடு போலீஸ் நிலையத்தில் அவர் விசாரணையில் இருந்தபோது அங்குள்ள கழிவறையில் இருந்த கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை காப்பாற்றிய போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் கிரஸ்மா குணம் அடைந்தார்.
முறிக்க முயற்சி
ஏன் கொலை செய்தார்? இதபற்றி போலீசார் அப்போது கூறும் போது, கிரீஸ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இது தெரிந்தால் ஒரு வருட காலமாக ஷாரோன்ராஜ் உடன் சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியில் கசியவிடக்கூடும் என்ற அச்சம் கிரீஸ்மாவுக்கு இருந்திருக்கிறது.
இதுதான் கொலைக்கான காரணமாக தெரிகிறது. ஷாரோன் ராஜ் உடனான காதலை முறிக்க கிரீஸ்மா முயன்றார்.
அது வெற்றி பெறாத தால் அவரையே கொலை செய்து காதலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.
தாய் மாமா கைது
இந்த வழக்கில் கிரீஸ்மாவின் தாய் சிந்து, அவரது மாமா நிர்மல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஷாரோன் ராஜை கொலை செய்ய பயன்படுத்திய விஷ பாட்டில் பறிமுதல்செய்த போலீசார். கிரீஸ்மாவை தொடர்ந்து அவரது தாய் சிந்து, மாமா நிர்மலையும் கைது செய்தனர். ஷாரோன் ராஜ் கொலை வழக்கு தமிழ்நாடு கேரளா ஆகிய இருமாநிலங்களையும் பெரிய அளவில் உலுக்கியது. இந்த வழக்கு விசாரணை கேரளாவில் நடந்து வருகிறது.
விசாரிக்கக்கூடாது
இந்நிலையில், வழக்கின் அடிப்படை சம்பவம் நடந்ததாக கூறும் இடம் தமிழகம் என்பதால் வழக்கை கேரள நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என மூவரும் நெய்யாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, வழக்கின் விசாரணையை கேரளாவில் நடத்தலாம் என தெரிவித்திருந்த நிலையில், வழக்கு நாளை 10 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பலமுறை பேச்சு
இதற்கிடையே இந்த கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை வெளியாகி உள்ளது. அதில் கிரீஷ்மாவுக்கும் ஷரோனுக்கும் இடையேயான பாலியல் உறவுகள் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாக அவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சந்திப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 13, 2022 அன்று இரவு, அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாலியல் ரீதியாக உரையாடலில் ஈடுபட்டனர்.
மறுநாள் காலை, கிரீஷ்மா ஷரோனை உடலுறவுக்கு அழைக்க பலமுறை தொடர்பு கொண்டாராம்.
ஷரோன் பின்னர் தனது உறவினரிடம், அக்டோபர் 14 ஆம் தேதி கிரீஷ்மாவின் வீட்டிற்கு வருமாறு அவர் வற்புறுத்தியதால் சென்றதாக கூறினார்.
அன்றுதான் ஷரோனுக்கு விஷம் கலந்த கஷாயம் பரிமாறப்பட்டது, அதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்தது.
விஷமான பாரசிட்டமால்
கிரீஷ்மா கொலையை மறைக்க முயன்றது பற்றிய தகவல்களும் குற்றப்பத்திரிகையில் இருக்கிறது. ஷரோனுடனான சாட்களை தனது மொபைலில் இருந்து நீக்கிவிட்டு, நீக்கப்பட்ட அரட்டைகளை மீட்டெடுக்க முடியுமா என்பதை அறிய கூகுள் மற்றும் யூடியூப்பில் தேடியது தெரியவந்துள்ளது. ராணுவ வீரரை திருமணம் செய்ய விரும்பிய கிரீஷ்மா அதற்காக காதலனை கொல்லமுடிவு செய்திருக்கிறார். அதற்காக அவர் ஜுஸில் பாரசிட்டமாலை அதிகமான அளவு டோஸ் கலந்து கொடுத்து விஷத்தை தயாரித்து கொடுத்திருக்கிறார் என்று குற்றப்பத்திரிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.