வவுனியா குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குளத்தில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் வவுனியா பொலிசாரால் நேற்று (19) மீட்கப்பட்டிருந்தது.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞனின் சடலம் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், அது 25 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்ட ஒருவரது சடலமாக இருக்கலாம் எனவும், இடது கையில் அம்மா என பச்சை குத்தியுள்ளதாகவும், கழுத்தில் சிவப்பு நூலும், ஒரு கையில் ஆலய நூலும், மற்றைய கையில் நீல பட்டியும் அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு அல்லது வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply