இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’. இப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் -2 பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் டிரைலரை வெளியிட்டார்.
இந்த டிரைலர் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து வருகிறது.
பொன்னியின் செல்வன் -2 இந்நிலையில், டிரைலர் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘பொன்னியின் செல்வன் -2’ டிரைலர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
The #CholasAreBack and are 5 million times stronger! Watch the #PS2Trailer Trending on #1
▶️ https://t.co/Sctojyf7bG#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN @SunTV pic.twitter.com/Vlzc4XeJZr
— Lyca Productions (@LycaProductions) March 30, 2023