தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள விஜய்க்கு பெரியவர்கள் மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளின் மனதிலும் தனி இடம் இருக்கிறது.,

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒருவர், “விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க” என்று வீடியோ பதிவு மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. Also Read – அரசியல்வாதியை மணக்கும் நடிகை இந்த நிலையில் தன்னை பார்க்க வருமாறு கேட்ட குட்டி ரசிகையுடன் நடிகர் விஜய் இன்று வீடியோ காலில் பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பற்றி அறிந்த விஜய், அந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார்.

விஜய்யுடன் பேசிய அந்த குழந்தையும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தது.

Share.
Leave A Reply