கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் மாணவன் ஒருவன் மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.