லக்னோ: எலியின் வாலில் கல்லை கட்டி கால்வாயில் மூழ்கடித்து கொன்றவருக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக 30 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

சில வெளிநாடுகளில் அவ்வபோது சில விசித்திரமான வழக்குகள் மற்றும் தண்டனை குறித்த செய்திகள் பரவும்..

ஆனால், தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் எலியை கொன்றதாக ஒருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 30 பக்க குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அதுவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதாம்…

எலியை கொன்றதற்கு இவ்வளவு கடுமையான தண்டனையா? என நீங்கள் புருவத்தை உயர்த்தி பார்ப்பது புரிகிறது.. இந்த வழக்கு பற்றிய விவரங்களை இங்கே விரிவாக காணலாம்.

எலியின் வாலில் கல்லை கட்டி: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புடான் சதார் கோட்வலி பகுதியை சேர்ந்தவர் விகேந்திர ஷர்மா…

விலங்கு நல ஆர்வலரான விகேந்திர ஷர்மா, அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு தீடிரென ஒரு இறந்த எலியுன் வந்தார்.

அவருடன் விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் வந்து இருந்த்நனர். போலீசாரும் சற்று குழம்பி போய் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது விகேந்திர ஷர்மா, மனோஜ் குமார் என்பவர் எலியின் வாலில் ஒரு கல்லை கட்டி கால்வாயில் தூக்கி போட்டதாகவும் இதை கவனித்த நான் எலியை காப்பாற்ற முயற்சித்தும் தோல்வியில் முடிந்து விட்டது… எலி இறந்து விட்டது எனவே..எலியை கொன்றவருக்கு எதிராக புகார் கொடுப்பதாக கூறினார்.

மேலும், இறந்த எலியை கையோடு கொண்டு வந்த ஷர்மா, உடனடியாக எலிக்கு பிரதே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஆனால், பிரதே பரிசோதனை செய்வதற்கு இங்கு வசதி இல்லை என்று போலீசார் கூறிய போதும் தனது கோரிக்கையில் பிடிவாதமாக ஷர்மா இருந்தார்.

இதையடுத்து எலியின் எச்சங்கள் பேரேய்லியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

30 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்: பிரேத பரிசோதனை அறிக்கையில் எலியின் நுரையீரல் மற்றும் கல்லீரல் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்து தெரியவந்தது.

எலி கால்வாயில் மூழ்கடிக்கப்பட்டதால் இறக்கவில்லை என்றும் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து எலியை கொன்ற மனோஜ் குமார் என்பவருக்கு எதிராக போலீசார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்தனர்.

5 நாட்களில் அவர் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு ஒருபக்கம் நடந்து கொண்டு இருந்த நிலையில், நீதிமன்றத்தில் 30 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

சட்டப்பிரிவு 11 ( விலங்குகள் வதை தடுப்பு சட்டம்) பிரிவு 429 ( விலங்குகளை கொல்லுதல் அல்லது ஊனமாக்குதல்) ஆகிய பிரிவுகளின் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக அதிகபட்சமாக ரூ.10 முதல் 2 ஆயிரம் ரூபாயும், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க முடியுமாம்.

சட்டப்பிரிவு 429- கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க முடியும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எலியை கொன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 30 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்து இருக்கும் இந்த விசித்திரமான வழக்கு குறித்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

Share.
Leave A Reply