கள்ளக்குறிச்சி: கல்குவாரியில் கள்ளக்காதலை வளர்த்த வாலிபரை உல்லாசத்தின் போதே ஆட்டை வெட்டுவது போல் வெட்டி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் ஒரு காதலி.

இப்படி ஒரு பயங்கரத்தை அந்த பெண் செய்ய காரணம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி அருகே உள்ளது மணலூர் கிராமம்.

இந்த கிராமத்தில் கல்குவாரி குட்டையில் வியாழக்கிழமை காலை சாக்கு மூட்டை ஒன்று மிதந்துள்ளது.

அதில் ரத்தக்கறைகள் அதிகமாக இருந்ததால், யாராவது கொலை செய்யப்பட்டு, சாக்கின் உள்ளே வைத்து வீசப்பட்டிருக்கலாம் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். சாக்கு மூட்டையை மீட்டு பிரித்து பார்த்தனர்.

அதில், கழுத்தில் வெட்டுக்காயத்துடன் வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சாக்குமூட்டையில் பிணமாக கிடந்த வாலிபர் மணலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த காத்தவராயன் மகன் தங்கதுரை(வயது 21) என்பதும், டிரைவரான அவரை யாரோ கொடூரமாக வெட்டி கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி கல்குவாரி குட்டையில் வீசியதும் அப்போது நடந்த விசாரணையில் தெரியவந்தது

உல்லாசம்: இதையடுத்து தங்கதுரை உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,

கொலை எப்படி நடந்தது என்று தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் கள்ளக்காதல் காரணமாக நடந்தது தெரியவந்தது.

விசாரணை விவரங்கள் குறித்து போலீசார் கூறும் போது, 21 வயதாகும் தங்கதுரை கடந்த 3 ஆண்டுகளாக கல்குவாரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது, கல்குவாரியில் வேலை செய்த அதேஊரை சேர்ந்த அய்யனார் மனைவி விஜயபிரியா(29) என்பவருடன் தங்கத்துரை பழகி உள்ளார்.

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்

கண்டித்த கணவன்: இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை செய்த அய்யனாருக்கு இந்த காதல் விவகாரம் தெரியவந்ததால் போனிலேயே மனைவியை கண்டித்துள்ளார்.

விரைவில் ஊருக்கு வர உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து கணவனின் பேச்சை மீறாத விஜயபிரியா தங்கதுரையுடனான கள்ளத்தொடர்பை கைவிட்டார்.

மேலும் அவர் கல்குவாரிக்கு வேலைக்கு செல்லாமல், தனது வீட்டின் முன்பு கோழி இறைச்சிக்கடை நடத்தி வந்திருக்கிறார்.

தன்னுடனான கள்ளத்தொடர்பை விஜயபிரியா கைவிட்டதால் தாங்கிக்கொள்ள முடியாத தங்கதுரை, அடிக்கடி விஜயபிரியாவை சந்தித்து ஏன் என்னுடன் பழகுவதை நிறுத்திவிட்டாய்? என்று கேட்டு வாக்குவாதம் செய்து வந்துள்ளார். ஆனால் விஜயபிரியாவோ, அவரை திட்டி அனுப்பி வைத்துள்ளார்.

காதலன் கொடூர கொலை: கள்ளக்காதலியை மறக்க முடியாத தங்கதுரை, சம்பவம் நடந்த அன்று மதுபோதையில் விஜயபிரியாவின் வீட்டிற்குள் தங்கதுரை நுழைந்திருக்கிறார்.

அங்கு தனிமையில் இருந்து விஜயபிரியாவை சமாதாப்படுத்த முயற்சித்து கட்டாயப்படுத்தி படுக்கையில் தள்ளியிருக்கிறார் தங்கதுரை.

படுக்கை பசி தீர்ந்ததும், காம மயக்கத்தில் இருந்தத தங்கதுரையை இனியும் விட்டுவைத்தால் கணவனுடன் நிம்மதியாக வாழ முடியாது என்று பயந்த விஜயபிரியா, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

உதடுகள் ஒரு பக்கம் உரசிக்கொண்டிருக்க தங்கதுரையை ஆட்டை அறுப்பது போல், இறைச்சி வெட்டும் கத்தியால் கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளார் விஜயபிரியா.

கள்ளக்காதலி கைது: இதையடுத்து யாருக்கும் தெரியாமல் தங்கதுரையின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துச் சென்று கல்குவாரி குட்டையில் வீசியுள்ளார்.

அத்துடன் விஜயபிரியா தடயங்களை மறைப்பதற்காக தங்கதுரையின் செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த துணிகளை வீட்டின் மாடியில் போட்டு தீவைத்து எரித்துள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விஜயபிரியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தகாத உறவின் முடிவுகள் எப்போதும் தவறாகவே முடியும் என்பதை இந்த கள்ளக்காதல்கள் உணர்த்துகின்றன.

ஆனாலும் இதுபோன்ற கள்ளக்காதல்களும், கொலைகளும் தொடரவே செய்கின்றன. கள்ளக்காதல் வழக்கில் கைதான விஜயபிரியாவிற்கு 12 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும்உள்ளார். கணவர் அய்யனார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்,

 

Share.
Leave A Reply