தனியார் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை, புதுவருட வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பலவந்தமாக முத்தமிட்ட அப் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்த பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே (வயது 61) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 23 வயதான ஆசிரியை அளித்த முறைப்பாட்டின் பெயரில் சந்தேக நபரான அதிபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று குறித்த ஆசிரியை பணிகளை முடித்து வீட்டுக்குச் செல்ல ஆயத்தமான போது புதுவருடத்திற்கு வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை எனக்கூறி சந்தேக நபரான அதிபர் வலுக்கட்டாயமாக ஆசிரியையை முத்தமிட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.