விடுதலைப்புலிகள் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப் பார்களானால் அவா்களால் கொல்லப்பட  வேண்டியவா்களின் முக்கிய பட்டியலில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினா்கள் இடம்பெற்றிருப்பா்.

விடுதலைப்புலிகள் முற்றிலுமாகச் செயலிழந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணமாக தமிழ்த்தேசியம் கதைக்கும் தற்போதய தமிழ் அரசியல்வாதிகள் திகழ்கின்றார்கள்.

அன்றைய தமிழ் அரசியல்வாதியான தந்தை செல்வா சொன்னது போல், இனிவரும் காலம் வடக்குக் கிழக்குத் தமிழா்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

புலித்தோல் போர்த்திய ஓநாய்க் கூட்டங்களால் தற்போது தமிழ்த்தேசியம் கற்பழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. யார், யார் உண்மையான தமழ்த்தேசியவாதிகள் என்று தெரியாத அளவிற்கு போலிகள் உலாவிக் கொண்டு இருக்கின்றனா்.

2009ம் ஆண்டுக்கு முன்னா் அறியப்படாதவா்கள் சிலா் தற்போது தமிழ்த்தேசியவாதிகளாக தங்களை உருமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவா்களில் முக்கியமானவா்கள் சுமந்திரன்,  சிறிதரன் மற்றும் பலா் இவ்வாறு புலிகளினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்குள் புகுந்து கொண்டவா்களாவார்.

அண்மையில் கிளிநொச்சியில் இலங்கை ஜனாதிபதி அங்கு கூடியிருந்த தமிழ்மக்கள் முன் சில உண்மைகளைப் போட்டுடைத்தார். அதாவது ‘நான் எவ்வளவு சொன்னாலும் நீங்கள் மாற மாட்டீா்கள் என்று எனக்குத் தெரியும்‘ அத்துடன் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைக்கோல் பட்டறை நாய்கள்‘ என்றும் கூறியிருந்தார்.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது வாசகா்களாகிய உங்களுக்குப் புரிந்திருக்கும். அவ்வாறு புரியாதவா்கள் பாவப்பட்ட ஜன்மங்களாகவே இருப்பார்கள். இங்குள்ள புகைப்படங்களைப் பாருங்கள்.

ஜனாதிபதி தங்களை ‘நாய்கள்‘ என்று சொல்லியும் கோபப்படாது அவருக்கு முன்னால் நின்று வாலாட்டும் இந்தக் கூட்டத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீா்கள். ஜனாதிபதி வைத்த தேனீா் உபசரிப்பில் அரசாங்கத்துக்கு எதிராக நிற்கும் எந்த ஒரு கட்சியும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இங்கே இந்த ‘நாய்கள்‘ என்ன செய்கின்றன என்பதைப் பாருங்கள்.

tna_parli_01

சாதாரண ஒரு தமிழன் தனது அடிப்படை வசதிகளுக்காக அரசாங்கத்துக்க ஆதரவாக இருந்தால் அவனுக்கு துரோகிப்பட்டம் கொடுக்கும் இந்தக் கூத்தாட்டிகள் தற்போது என்ன செய்கின்றார்கள்?

அரசாங்கம் வழங்கும் அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக் கொண்டும் , தமிழ்த் தேசியம் பற்றிக் கதைத்துக் கொண்டும் அரசுடன் கள்ள உறவில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கும் இவ்வாறானவா்களால் தமிழா்களுக்கு சரியாக தீா்வு கிடைக்குமா என அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இராணுவத்தை வடபகுதியில் இருந்து வெளியேற்றுவோம் , ஜனாதிபதியி்ன் ஆணவத்தை ஒழிப்போம், இனி வரும் வருடம் போரில் குதிப்போம் என குத்தாட்டம் போட்டவா்கள் இங்கு என்ன செய்கின்றார்கள் என பாருங்கள்.

தமிழா்களின் தேசம் வடக்கு கிழக்கு என அனைவராலும் நினைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, தற்போது வடக்கை மட்டும் மையப்படுத்தி கூட்டமைப்பு நடாத்தும் நாடகம் என்ன என்பது அனைவரும் புரிந்து கொள்ளல் வேண்டும்.

tna_parli_02

அதாவது கிழக்கு அவா்களின் கையை விட்டு போய்விட்டது. அல்லது திட்டமிட்டு அவா்களால் கைமாற்றப்பட்டுவிட்டது. கிழக்கை வைத்து தமது அரசியலை இனியும் நடத்த முடியாது என்பதால் வடபகுதியில் தமது அரசியல் மையத்தை வைத்து விளையாடுகின்றது கூட்டமைப்பு.

கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துடன் இணைந்து குடும்பம் நடாத்துவதற்கு மிகுந்த விருப்பம் இருக்கின்றது. ஆனால் என்ன செய்வது? அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் அதாவது வாக்காளா்கள் தமிழ்த்தேசிய சிந்தனையில் ஊறியிருக்கின்றார்களே!!

அதனால் கூட்டமைப்பும் ஆடுகிற மாட்டை ஆடிக் கறப்பது போல் பாடுகிற மாட்டைப் பாடிக் கறப்பது போல் தமிழ்த்தேசியத்தைக் கதைத்துக் கதைத்து மக்களின் வாக்குகளை கறந்து கொண்டு இருக்கின்றார்கள்.

உண்மையில் தமிழ்த்தேசிய சிந்தனை உள்ள உறவுகளாக இருக்கும் மக்களே!! உங்களுக்கு சில கேள்விகளைத் தருகின்றோம். அவற்றை நீங்கள் கூட்டமைப்பில் உள்ள யாராவது ஒரு உறுப்பினரிடத்தில் கேட்டுப் பாருங்கள். அவா் உங்களைத் துரோகி, அரசின் அடிவருடி என கூறத் தொடங்கினால் அந்த இடத்திலேயே அவரது முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு வாருங்கள்.

நீங்கள் அவரிடம் கேட்கும் கேள்விகள்

1) நீங்கள் இலங்கை ஆமிக்கு எதிராக ஆயுதம் தாங்கி விடுதலைப் புலிகளுடன் இணைந்து தமிழ்ஈழத்திற்காகப் போராடினீா்களா?
2) உங்களது சகோதரங்கள் யாராவது இலங்கை ஆமிக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடினார்களா?
3) நீங்கள் மாவீரா் குடும்பமா?
4) வன்னிப் போரில் நீங்கள் யாரையாவது இழந்துள்ளீா்களா?
5) தமிழ்த் தேசியம் கதைத்து சிறைக்குச் சென்றுள்ளீா்களா? அல்லது இலங்கை அரசிடம் புனா்வாழ்வு பெற்றுள்ளீா்களா?
6) கடந்த முப்பது வருட போராட்டத்தில் ஈழத்தில் வாழ்ந்த உங்களுக்கு உடம்பில் ஏதாவது குண்டுக் காயங்கள் இருக்கின்றதா?
7) 2009ம் ஆண்டுக்கு முன்னா் நீங்களும் உங்கள் குடும்பமும் எங்கு இருந்தீா்கள்? என்ன செய்து கொண்டு இருந்தீா்கள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீ்ங்கள் ஏதாவது உதவி செய்துள்ளீா்களா? அதாவது சொந்தமாக உங்கள் பணத்தில் இருந்து ஏதாவது செய்துள்ளீா்களா?

9) நீங்கள் துரோகிகள் என்று கூறுகின்ற நபா்கள் என்னமாதிரியான செயற்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று விளங்கப்படுத்துவீா்களா?

10) போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளால் நீங்கள் புறக்கணிக்கப்பட்ட கட்சியைச் சோ்ந்தவா்களா? அவ்வாறானவா்கள் எனில் ஏன் உங்களைப் புலிகள் புறக்கனித்தார்கள்,? அதன் பின்னா் எவ்வாறான நிபந்தனையுடன் உங்களைப் புலிகள் ஏற்றுக் கொண்டார்கள்?

11) இனி ஒரு தோ்தல் நடந்தால் நீங்கள் விடுதலைப்புலிகளை முன்னிறுத்தாது அவா்களின் போராட்டத்தைப் பற்றி பெருமை பேசாது உங்களால் வாக்குச் சேகரிக்க முடியுமா?

இந்த கேள்விகளில் ஏதாவது 3 கேள்விகளுக்காவது அவா்கள் சரியான முறையில் பதிலளிக்காது விட்டால் ஒன்றுக்கும் பயப்படாது நீங்கள் செய்யவேண்டிய செயல் நீங்கள் கேள்வி கேட்ட நபரின் முகத்துக்கு நேரே காறித் துப்பிவிட்டு வாருங்கள். நீங்கள் அரசாங்கத்துடனோ அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவான கட்சியுடனோ சேராது இருந்தாலும் நீங்கள் காறித்துப்பிய நபா் அடுத்த விநாடியே உங்களைப் பற்றி ஊடகங்களுக்கு தகவல் கொடுப்பார் நீங்கள் ஒரு துரோகி என!!

tna_parli_03

இவ்வாறான துரோகப் பட்டத்தை நீங்கள் பெற்றாலும் இதற்கெல்லாம் கவலைப் படாது சரியான அரசியல் தலைமையை நீங்கள் தோ்ந்து எடுத்தீா்களானால் நீங்களும் ஒரு தமிழ்த்தேசியப் பற்றாளன் என போற்றப்படுவீா்கள்.

இந்தப் 11 கேள்விகளும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை வைத்தே கேட்கப்பட்டுள்ளது .ஏனெனில் கூட்டமைப்பும் இதே போராட்டத்தை வைத்தே தமிழ் மக்களின் வாக்குகளைச் சுரண்டுகிறது. உண்மையில் தமிழ்  ஈழத்திற்காக பற்றுடன் யுத்தம் செய்து நொந்து நூலாகிப் போனவா்கள் தற்போது ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாது திரிவது அனைவருக்கும் தெரியும். அவா்களுக்கு இல்லாத தமிழ்த்தேசியப் பற்று இந்த நாய்களுக்கு வந்துள்ளது எப்படி என்பது பெரும் வியப்பாக இருக்கும்.

நீங்கள் அரசாங்கத்துடனோ அல்லது அரசாங்கத்திற்கு ஆதரவான கட்சியுடனோ சேரவோ அல்லது ஆதரவு அளிக்கவோ தேவையில்லை. சரியான தமிழ்த்தேசப்பற்றாளா்களைக் கண்டு பிடித்து அவா்களுக்கு வாக்குப் போடுங்கள். வருங்கால தமிழ் அரசியல் நல்ல நிலையில் இருக்கும்.

ஏனெனில் ஜனாதிபதியே தெரிவித்துவிட்டார் ‘நான் என்ன சொன்னாலும் நீங்கள் மாறமாட்டீா்கள்‘ என்று. தமிழ் மக்களாகிய நீங்கள் தெரிவு செய்யும் தலைமை எதையும் வெளிப்படையாக , நயவஞசகம் இல்லாது, நரித்தனம் இல்லாது , மற்றவா்களுக்கு பயப்படாது, இதைத்தான் செய்வேன் என துணிவாகத் தெரிவிக்கும் தமிழ்த் தலைமைகளை தெரிவு செய்து அவா்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

அவ்வாறானவா்கள் உங்களுக்கு கிடைக்கவில்லையெனில் அதுவரை நீங்கள் காத்திருங்கள். இந்தக் கூட்டமைப்பு உறுப்பினா்களை நம்பாதீா்கள். இவா்களால் உங்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.

சரியான தலைமை கிடைக்கும்வரை நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று இருக்கின்றது. அதாவது வைக்கோல் பட்டறை நாய்களாக இருந்து அரசாங்கம் செய்யும் உதவிகளையும் தடுத்து நிறுத்தி அரசாங்கத்துடனேயே சோ்ந்து இருந்து உங்களுக்கு ஏமாற்று வித்தை காட்டும் இந்த நாய்களைக் கலைத்துவிட்டு நீங்கள் வைக்கோல் பட்டறைகளைத் தாராளமாகச் சாப்பிடுங்கள்.

உங்களுக்கு வைக்கோல் பட்டறைகளைத் தந்தவா்களுக்கு உதவி புரியுங்கள். ஏனெனல் வைக்கோல் முடிய முடிய உங்களுக்கு திரும்பத் திரும்பக் கிடைக்கும்.

உங்களது தேசியப் பற்றிற்கு சரியான எஜமான் வரும் வரையில் நீங்கள் உங்களை திடப்படுத்திக் கொண்டு நன்றாக வைக்கோல்பட்டறைகளைச் சாப்பிட்டு உங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான் ஆற்றலுடன் நாம் எதையும் செய்ய முடியும்.

tna_parli_031tna_parli_04மாவையார்  கூனிக்குறுகி  மூஞ்சியை   நீட்டிக்கொண்டு  வந்து மகிந்தவிடம்  கதைகேட்க  முற்படும் அழகை பாருங்கள்!!

tna_parli_05என்ன சிரிப்பு!! என்ன சிரிப்பு  ஆனந்தம்…ஆனந்தம்  உங்களை பார்த்தாலே  ஆனந்தம்.

வட மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டால்  தமிழ்  மக்கள்  அதை விரும்பமாட்டார்கள். ஆனால் மகிந்த  அளித்த  தேனீர் விருந்தில் தவறாமல்  கலந்து கொண்டு  மகிந்தவை  கட்டிப்பிடித்து  அளவளாவி, கொஞ்சிக் குலாவி  மகிழலாம்.  இதை  தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

supiramaniaya-suvamy-widget_gk_news_slideshow-2
பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்!

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?? – பகுதி-3

Share.
Leave A Reply