யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 100 வயதான மூதாட்டி இன்று (27) உயிரிழந்துள்ளார்.

ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தாக்குதலின்போது காயமடைந்த நாயும் நேற்று (26) உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கொலைச் சம்பவத்தில் நகைகளுடன் தப்பித்த பிரதான சந்தேக நபர் புங்குடுதீவில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply