குஜராத் மாநிலம் சூரத் வேத் சாலையில் உள்ள படக்டவாடியை சேர்ந்தவர் அப்துல் (40) இவரது மனைவி பில்கிஸ் கமானி( 35) இவர்களுக்கு 5 வயதில் திவ்யாங் என்ற மகள் இருந்தார்.
நோயால் பாதிக்கபட்டு இருந்த சிறுமி தொடர்ந்து அழுததால் கோபமடைந்த பில்கிஸ் மகலை ஒங்கி தரையில் அடித்து உள்ளார். பின்னர் தொடர்ந்து தாக்கி உள்ளார்.
மாலையில், சிறுமியின் தந்தை அப்துல் வீட்டிற்கு வந்தபோது, சிறுமியின் உடல்நிலை மோசமாக இருப்பதைக் கவனித்தார்.
உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ஆனால் சிறுமி இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்து விட்டார்.
மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் உடலில் வெளிப்புற மற்றும் உள் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வெள்ளிக்கிழமை பில்கிஸ்சை கைது செய்தனர்.