யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி படுகாயம் அடைந்துள்ளார்.

அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றைய தினம் (05.05.2023) விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் பலி

ஹயஸ் – மோட்டார் சைக்கிளில் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் கோர விபத்தில் கணவன் பலி! மனைவி படுகாயம் | Accident In Jaffna Husband Dies Wife Injured
பொலிஸார் விசாரணை

பூம்புகார் பகுதியை சேர்ந்த 39 வயதான அற்புதசிங்கம் சுதர்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply